காதலிப்பதாகக் கூறி நர்ஸை கர்ப்பமாக்கி ஏமாற்றிய டாக்டர் கைது..!
சென்னை அண்ணாநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்யும் 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் `நான் வேலை செய்யும் மருத்துவமனையில் டாக்டராக கௌதம் என்பவர் பணியாற்றுகிறார். அவர் என்னை காதலிப்பதாகக் கூறி என்னுடன் நெருங்கிப் பழகி வந்தார். பின்னர் என்னை அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி என்னை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டார். அதில் நான் கர்ப்பமடைந்தேன். பின்னர் அவர் சில காரணங்களைக் கூறி என்னை கருக்கலைப்பு செய்ய வைத்தார்.தற்போது என்னை திருமணம் செய்து கொள்ள கௌதம் மறுக்கிறார். எனவே டாக்டர் கௌதம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் டாக்டர் கௌதமை விசாரணை நடத்துவதாக கூறி காலம் கடத்தி வந்தனர். அதனால் விரக்தியடைந்த நர்ஸ், கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணாநகர் துணை கமிஷனரைச் சந்தித்தார். இதையடுத்து நர்ஸின் புகாரை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி துணை கமிஷனர், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார், டாக்டர் கௌதமை விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்குப்பிறகு கௌதமை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கெளதம், சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb