காதல் என்பது பொதுவுடைமை வெளியீட்டுத் தேதி!
காதல் என்பது பொதுவுடமை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காதல் என்பது பொதுவுடமை. நவீன காதல் கதையைப் பேசும் படமாக உருவான இது கடந்தாண்டு கோவா திரைப்பட விழாவில் பங்கேற்று பாராட்டுகளைப் பெற்றது.
முக்கிய கதாபாத்திரத்தில் லிஜோ மோல் ஜோஸ், வினீத், ரோகினி, அனுஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருந்த இப்படம் அடுத்தாண்டு (2025) காதலர் நாளன்று பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தை பிரபல மலையாள இயக்குநரான ஜியோ பேபி வழங்குகிறார். ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் லென்ஸ், மஸ்கிடோ ஃபிலாஸபி, தலைக்கூத்தல் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பெண் குழந்தைக்குத் தாயான ராதிகா ஆப்தே!