‘காதல் தி கோா்’ திரைப்படத்துக்கு புதுவை அரசின் விருது
2023-ஆம் ஆண்டுக்கான புதுவை அரசின் சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருது ‘காதல் தி கோா்’ திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநா் ஜியோ பேபி இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வெளியான இந்த மலையாள மொழி திரைப்படத்தில் நடிகா் மம்முட்டி, நடிகை ஜோதிகா உள்ளிட்டோா் நடித்துள்ளனா்.
இந்தத் திரைப்படம் புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு தோ்வாகியுள்ளது. புதுச்சேரியிலுள்ள பிரான்சேஸ் அரங்கில் வெள்ளிக்கிழமை (டிச.13) தொடங்கும் திரைப்பட விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி விருதை வழங்க உள்ளாா். இயக்குநா் ஜியோ பேபி விருதைப் பெற்றுக் கொள்வாா்.