செய்திகள் :

காத்திருப்புக்குக் கிடைத்த வெற்றி... மகன் அர்ஜுனைப் பாராட்டி நெகிழ்ந்த சச்சின்!

post image

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். 2026 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அறிமுகமான அவர், தனது முதல் போட்டியிலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மகனின் இந்த சாதனைப் பயணத்தின் தொடக்கத்தைக் கண்டு, தந்தை சச்சின் சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிமுகப் போட்டியிலேயே கவனம் ஈர்த்த அர்ஜுன்!

சனிக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், லக்னோ அணி தோல்வியைத் தழுவியபோதும், 26 வயதான அர்ஜுனின் பந்துவீச்சு அனைவரையும் கவர்ந்தது. 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஒரு துல்லியமான யார்க்கர் மூலம் பிரப்சிமரனை எல்பிடபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழக்கச் செய்தது, அவரது திறமைக்குச் சான்றாக அமைந்தது. போட்டியின் முதல் ஓவரிலேயே ஒரு கேட்ச் தவறவிடப்படவில்லை என்றால், அவருக்கு இன்னுமொரு விக்கெட் கிடைத்திருக்கும். பந்துவீச்சில் மட்டுமல்லாது, பேட்டிங்கிலும் களம் கண்ட அவர், 5 பந்துகளைச் சந்தித்து 5 ரன்கள் எடுத்தார்.

மகனுக்காக உருகிய தந்தை!

அர்ஜுனின் இந்த சிறப்பான தொடக்கத்தைக் கண்டு பெருமைப்பட்ட சச்சின், தனது X பக்கத்தில் உணர்ச்சிகரமான ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "நன்றாகச் செய்தாய் அர்ஜுன். இந்த சீசன் முழுவதும் நீ உன்னை வழிநடத்திய விதம் பெருமையளிக்கிறது. உன் திறமை மீது நீ வைத்திருந்த நம்பிக்கை, பொறுமை, அமைதியாகக் காத்திருந்து கடினமாக உழைத்தது, கடைசிப் போட்டி வரை வாய்ப்புக்காகக் காத்திருந்தபோதும் நேர்மறையாக இருந்தது என அனைத்தும் பாராட்டுக்குரியது," என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், "கிரிக்கெட், திறமையை சோதிப்பது போலவே பொறுமையையும் சோதிக்கும். இன்று இரண்டையும் நீ சிறப்பாகக் கையாண்டாய். எப்போதும் போல் ஆட்டத்தின் மீது காதல் கொண்டு, அடக்கத்துடன் பயணத்தைத் தொடர்வாயாக. எப்போதும் என் அன்பு உனக்கு உண்டு," என்று தனது வாழ்த்தையும், அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

புதிய அணி, புதிய தொடக்கம்!

2026 ஐபிஎல் தொடர் அர்ஜுனுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சீசனாகும். இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த அவர், இந்த ஆண்டுதான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். லக்னோ அணி பிளேஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், தொடரின் கடைசி லீக் போட்டியில் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. கிடைத்த ஒரே வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, தனது திறமையை நிரூபித்துள்ளார் அர்ஜுன்.

RCB: "கோலியுடன் விளையாடும்போது என் பேட்டிங் மேம்படுகிறது" - அனுபவம் பகிரும் தேவ்தத் படிக்கல்

ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் ஜியோஸ்டார் உடனான பேட்டியில் தனது ஐபிஎல் கிரிக்கெட் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். ''2020 சீசனில்தான் நான் அறிமுகமானேன். உள்ளூர் கிரிக்கெட்டில... மேலும் பார்க்க

'கிரிக்கெட் தான் என் வாழ்க்கை, ஆனால்.!' - ஓய்வை அறிவித்த தமிழக வீரர் விஜய் சங்கர்

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ... மேலும் பார்க்க

'Keep the body guessing': கோலியின் புறக்கணிப்புக்கு இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்தாரா ஹெட்?

ஐபிஎல் 2026 தொடரில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி, களத்தில் நடந்த மோதலைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்பட... மேலும் பார்க்க

GT vs CSK: "சென்னை, பெங்களூரு அணிகளுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம்; ஆனால்..." - சுப்மன் கில்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.21) ஆட்டத்தில் குஜராத் அணியும், சென்னை அணியும் மோதின. இதில் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருக்கிறது. தோல்வியைத் தழுவிய சென்னை அணி மூன்றாவது மு... மேலும் பார்க்க

GT vs CSK: "அவர் அணியில் இல்லாதது எங்களுக்குப் பெரிய இழப்புதான்" - யாரைச் சொல்கிறார் ருதுராஜ்?

ஐபிஎல் தொடரின் தனது கடைசி போட்டியை குஜராத்திற்கு எதிராக விளையாடிய சென்னை அணி, 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி, மூன்றாவது முறையாக பிளே-ஆஃப் செல்லாமல் தொடரை முடிக்கிறது. இப்போட்டிக்குப் பின்ன... மேலும் பார்க்க

`எல்லாம் சரி, அந்த கொண்டாட்டத்துக்கு என்ன அர்த்தம்?' - வைபவ் சூரியவன்ஷி சொன்ன சிம்பிள் பதில்

தொடரின் மிக முக்கியமான கட்டத்தில், தனது மூன்றாவது ஆட்டநாயகன் விருதை வென்ற இளம் வீரர், களத்தில் காட்டும் அதே பாணியை தனது பேச்சிலும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்றைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பின்... மேலும் பார்க்க