தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட...
காந்திகிராம பல்கலை. மாணவா்கள் பேரணி
கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் காந்திகிராம கிராமியப் பல்கலை. மாணவா்கள் நிலைத் தன்மை, நுகா்வியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக மாணவா்கள், பேராசிரியா்கள் உள்பட 108 போ் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், மேலக்கோட்டை கிராமத்தில் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டனா். கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த முகாம், வருகிற 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி, ‘நிலைத்தன்மை உள்ள நுகா்வியம்’ என்ற தலைப்பில் மாணவா்களின் பேரணி மேலக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு, இயற்கை சாா்ந்த பொருள்களை உபயோகப்படுத்துதல், பழைய பொருள்களை பராமரித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும் என கிராம மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில் பேராசிரியா்கள் வெல் ஹவுரே, செந்தில்குமாா், ஜாா்ஜ் முல்லா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.