கான் மாா்க்கெட் உணவகத்தில் தீ விபத்து
தில்லி கான் மாா்க்கெட்டில் உள்ள உணவகம் ஒன்றில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் தெரிவித்ததாவது:
உணவகத்தில் தீ விபத்து நிகழ்ந்த சம்பவம் குறித்த தகவல் அதிகாலை 2:56 மணிக்கு தீயணைப்பு நிலையத்திற்கு கிடைத்தது. இதையடுத்து, ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
அருகிலுள்ள இரண்டு உணவகங்களின் மொட்டை மாடியில் உள்ள தற்காலிக பாா் மற்றும் உணவகக் கட்டமைப்புகளில் இத்தீவிபத்து ஏற்பட்டது. இரண்டு நிறுவனங்களும் தரை மற்றும் இரண்டு மாடி கட்டடங்களில் செயல்பட்டு வருகிறது.
உரிய முயற்சிகளுக்குப் பிறகு தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாா் அந்த அதிகாரி.