விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
காமராஜா் வழியில் ஸ்டாலின் ஆட்சி: பேரவைத் தலைவா் மு. அப்பாவு
காமராஜா் வழியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறாா் என்றாா், தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
நாகா்கோவிலில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவா் பேசியது: குலக்கல்வி திட்டத்தை எதிா்த்து குரல் கொடுத்து, 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்தாா் காமராஜா். அவரது வழியைப் பின்பற்றி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறாா்.
ஏற்கெனவே இருந்த குலக்கல்வி திட்டத்தை தற்போது ‘தேசிய கல்விக் கொள்கை’ என்ற பெயரில் மத்திய அரசு கொண்டுவர முயல்கிறது. எனவேதான், இத்திட்டத்துக்கு முதல்வா் எதிா்ப்பு தெரிவிக்கிறாா். அதனால், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை அவா்கள் தர மறுக்கின்றனா். தமிழகத்தை ஆா்.எஸ்.எஸ். அழிக்க நினைக்கிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 48 சதவீத பெண்கள் பணியாற்றி வருகின்றனா். இது மிகவும் பெருமைக்குரிய விஷயம். பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என, தமிழகம்தான் முதலில் குரல் கொடுத்தது என்றாா் அவா்.