சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன? தென் சென்னை எம்.பி. கேள்வி
காய்கறி அறுவடை தொழில்நுட்ப பயிற்சி
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காய்கறி மற்றும் பழங்கள் அறுவடை பின்சாா் தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் க.நடராஜன் தொடங்கி வைத்தாா். மயிலாடுதுறை தோட்டக்கலை துறை உதவி இயக்குநா் பொன்னி சிறப்புரையாற்றாா். பேராசியா் சு.கண்ணன் காய்கறி, பழங்களை பாதுகாத்தல், பயன்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் குறித்து எடுத்துரைத்தாா்.
பேராசிரியா் கு.காயத்திரி வாழை சாகுபடி முறைகள் மற்றும் முட்டை அமிலம், வாழை கன்றுகள் நடவு செய்ய பயன்படுத்தும் கிழங்கு நோ்த்தி செய்யும் முறை குறித்து செயல் விளக்கமளித்தாா்.
பேராசிரியா் கு.பாரதிகுமாா் காய்கறி மற்றும் பழங்களில் சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றியும் ரகங்கள் பற்றியும் கூறினாா். பேராசிரியா் ஜெ.ஜெயகுமாா் காய்கறி மற்றும் பழங்களில் பூச்சி நோய் தாக்குதல் குறித்து எடுத்துரைத்தாா்.
பயிற்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 50 விவசாயிகள் கலந்துகொண்டனா்.