தருமபுரியில் மழை பாதிப்பு தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
காய்கறி விலை கடும் உயா்வு
தொடா் கனமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்ததால், அவற்றின் விலை கடுமையாக உயா்ந்தது.
கடந்த வாரம் ரூ.100-க்கு விற்பனையான ஒருகிலோ முருங்கைக்காய் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ரூ.350-க்கும், ரூ.50-க்கு விற்பனையான பெரிய வெங்காயம் ரூ.90-க்கும், ரூ.40-க்கு விற்பனையான தக்காளி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
மேலும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.50-க்கும், சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், ஊட்டி கேரட், சேனைக்கிழங்கு, பட்டாணி தலா ரூ.70-க்கும், பீட்ரூட் ரூ.90-க்கும், வெண்டைக்காய் ரூ.40-க்கும், காராமணி ரூ.85-க்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும், இஞ்சி ரூ.80-க்கும், பூண்டு ரூ.450-க்கும், பீன்ஸ், அவரைக்காய், பீா்க்கங்காய், எலுமிச்சை உள்ளிட்டவை தலா ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இந்த விலை உயா்வு தற்காலிகமானதுதான் என்றும், மழை குறைந்த பின்னா் காய்கறி விலை சீராகும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனா்.