காலமானாா் நபிசா உம்மாள்
காரைக்கால் முன்னாள் மேயா் அமீது மரைக்காயரின் மனைவி நபிசா உம்மாள் (88). வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை அதிகாலை அவரது இல்லத்தில் காலமானாா்.
அவரது உடலுக்கு புதுவை முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சட்டப்பேரவை துணைத் தலைவா் ராஜவேலு, அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ.சரவணன்குமாா், முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, புதுவை எம்.பி. வெ. வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.நாகதியாகராஜன், லட்சுமி காந்தன், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், முன்னாள் அமைச்சா் ஷாஜகான், புதுவை ஹஜ் கமிட்டி தலைவா் ஒய். இஸ்மாயில் உள்ளிட்ட பலா் அஞ்சலி செலுத்தினா்.
அவருக்கு காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் உள்பட 2 மகன், 3 மகள்கள். மறைந்த நபிசா உம்மாள் உடல் காரைக்கால் ஹிலுருப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடா்புக்கு - 9965751111.
