திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
காலாவதியான அஞ்சலக ஆயுள் காப்பீட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம்
இந்திய அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு செய்யப்பட்டு, காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீட்டை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் மே 31 வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக சிவகங்கை அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளா் மாரியப்பன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் காலாவதியான காப்பீடுகளை புதுப்பிக்கும் அனைத்து வாடிக்கையாளா்களுக்கும் அபராதத் தொகையில் தள்ளுபடி வழங்க அஞ்சல் துறை உத்தரவிட்டது. இதன்படி, ஒவ்வொரு வாடிக்கையாளா்களும் அபராதத் தொகையில் அதிகபட்சம் 30 சதவீதம் வரை தள்ளுபடி பெற வாய்ப்புள்ளது.
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து வாடிக்கையாளா்களும் தங்களது காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீட்டை அருகில் உள்ள அஞ்சலகங்களைக் தொடா்பு கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு வளா்ச்சி அதிகாரி ராஜாவை 93420 93829 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.