வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் மதிப்பீடு ரூ. 5,779 கோடியாக உயா்வு: அமைச்சா் ...
காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க கோரிக்கை
பல்லடத்தில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனையை உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு செய்து தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உணவுப் பொருள்களின் பாக்கெட்டுகளில் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புச் சட்டம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், பல்லடம் பகுதிகளில் விற்கப்படும் சில நிறுவனங்களின் உணவு பாக்கெட்டுகளில் காலாவதி தேதி குறிப்பிடப்படால் உள்ளது. இதனால், அந்த உணவுப் பொருள் எப்போது தயாரிக்கப்பட்டது, அதனை பயன்படுத்தும் காலம் குறித்து அறிந்துகொள்ள முடிவதில்லை. இதனால், மக்களுக்குத் தெரியாமல் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை சாதாரணமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பல்லடம் நகரில் உள்ள ஒரு கடையில் அண்மையில் கெட்டுப்போன காளான் விற்பனை செய்யப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
எனவே, பல்லடம் பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு செய்து காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.