கோயில்களின் நிர்வாகம், பராமரிப்பு செலவிற்கான அரசு மானியம் உயர்வு!
காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வருகை: விஜய்யை விமர்சித்த திருமாவளவன்
காலவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பதாக தவெக தலைவர் விஜய்யை விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கட்சித் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா, தமிழக ஆளும் கூட்டணியை விமர்சித்திருந்தனர்.
இதையும் படிக்க : பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி!
இந்த நிலையில், தருமபுரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் புதன்கிழமை இரவு பேசிய திருமாவளவன் விஜய்யை விமர்சித்துள்ளார்.
திருமாவளவன் பேசியதாவது:
“அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் போன்ற மாமனிதர்களின் கொள்கைகளில் எனக்கு தெளிவு இருக்கிறது, தீவிரமான பிடிப்பு இருக்கிறது. ஆகையால், என்னை எந்த கொம்பனாலும் விலைக்கு வாங்க முடியாது.
சராசரி அரசியல்வாதியாக இருந்திருதால் கட்சிக்கு எப்போதே அங்கீகாரம் பெற்றிருக்க முடியும்.
10 ஆண்டுகள் தேர்தல் அரசியலுக்கு வராமல் மொத்தம் 35 ஆண்டுகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற பாடுபட வேண்டியிருந்தது.
சிலர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து பணத்தையும் சுகத்தையும் தேடி, இளம்காலத்தை சொகுசாக கழித்துவிட்டு தேவையான சொத்துகளை சேர்த்தபிறகு, காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள்.
அவர்கள் ஊர் ஊராகச் சென்று அழைந்து கொடியேற்ற வேண்டியதில்லை, மக்களை சந்திக்க தேவையில்லை, உடனடியாக கட்சியைத் தொடங்கி ஆட்சிக்கு போக நினைக்கிறார்கள்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது. இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை. அரசியல் வல்லுநர்கள் ஆராய்ந்து சொல்லி உள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.