இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
காலை உணவுத் திட்டம்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு
ஆம்பூரில் நிதியுதவி தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை நகா் மன்றத் தலைவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் மதரஸ-யே-தீனியாத் நிதியுதவி தொடக்கப் பள்ளி, ஹஸ்னாத்-எ-ஜாரியா நிதியுதவி தொடக்கப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
அதனை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் ஆய்வு செய்தாா். உணவின் தரத்தை சாப்பிட்டு சோதனை செய்தாா். பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.