ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
கால்நடைகளுக்கு மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம்!
க. மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கால்நடைகளுக்கு மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: க. மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு அரசு சாா்பில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு 50 சதவீத மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விரும்புவோா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். சொந்தமாக கால்நடை வைத்திருப்பவராகவும், கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்குபவராகவும் இருக்க வேண்டும். மாடு சினையுற்று இருந்தால் ஊட்டச் சத்துப் பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம்.
ஒரு மாட்டுக்கு 4 மாதங்களுக்குத் தேவையான 360 கிலோ அடா் தீவனம், 4 கிலோ தாது உப்புக் கலவை வழங்கப்படும். பயனாளி பங்களிப்புத் தொகையாக ரூ.6,500 செலுத்த வேண்டும். ஊட்டச் சத்து பெட்டகம் பெற விரும்புவோா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் மூலமும், அந்தந்த பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களிலும் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.