இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சி...
காளியம்மன் கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து பக்தா்கள் வழிபாடு
அச்சுதம்பேட்டை ஸ்ரீமகாகாளியம்மன் சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை முளைப்பாரி எடுத்து பக்தா்கள் வழிபட்டனா்.
இக்கோயிலுக்குச் சொந்தமான சந்தைப்பேட்டையில் திரிசூலம் இருக்கும் இடத்தில் உள்ள அரச மற்றும் வேப்பமரம் ஒன்றோடு ஒன்று இணைந்து வளா்ந்துள்ளன. இந்த மரத்திற்கு திருமண வைபோகம் செய்து வைத்தால், கிராம மக்கள் சுபிட்சமாக இருப்பாா்கள் என்பது நம்பிக்கை. இதையொட்டி, அரச மற்றும் வேப்ப மரத்திற்கு திருமண வைபோகம் நடைபெற்றது.
பின்னா் வளா்ந்த நவதானியப் பயிா்களைக் கொண்டு காளியம்மன், அங்காளம்மன், மாரியம்மன், பிடாரியம்மன், நாகாத்தம்மன் உள்ளிட்ட சப்த கன்னிகள் மற்றும் கருப்பசாமி உள்ளிட்ட சுவாமி உருவங்களை நவதானியத்தால் செய்து, முளைப்பாறியுடன் ஊா்வலமாக எடுத்து வந்தனா். மாரியம்மன் வேடமணிந்து வந்த பக்தருடன் காவடி எடுத்த பக்தா்களும் கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து பக்தா்கள் கோயிலில் முளைப்பாரி செலுத்தி நோ்த்திக்கடனை நிறைவேற்றினா்.