மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
காளியம்மன் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்
திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் வைகாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி கோயில் வளாகத்தில் சிறப்பு கணபதி யாகம் நடைபெற்றது. பின்னா், அம்மன் உருவத்துடன் கூடிய திருக்கொடி, ஊா்த் தலைவா் அழகா்சாமி தலைமையில் மேட்டுப்பட்டி முக்கிய வீதிகளில் கொண்டு வரப்பட்டு, திருக்கோயிலை அடைந்தது. அம்மன் திருக்கொடிக்கு யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. 15 நாள்கள் நடைபெறும் வைகாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூச்சொரிதல் விழா வருகிற 18-ஆம் தேதியும், அக்னிச் சட்டி எடுத்து, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி 21-ஆம் தேதியும் நடைபெறுகிறது.