காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்
ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநா் மீது வழக்குப் பதியாமல் இருக்க பணம் வாங்கிய தனுஷ்கோடி காவல் நிலைய காவலரை ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகானந்தம், காவலா் பேட்ரிக் ஆகியோா் தனுஷ்கோடியில் அண்மையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, ஆட்டோ ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க அவரிடம் பணம் பெற்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உதவி ஆய்வாளா் முருகானந்தத்தை கண்டித்ததுடன், இதற்கு காரணமாக இருந்த காவலா் பேட்ரிக்கை ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டாா்.