செய்திகள் :

காவலா் பணி: 130 பேருக்கு பணி நியமன ஆணைகள்

post image

தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சோ்ந்தவா்கள் என 130 பேருக்கு பணி நியமன ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலைக் காவலா்கள், சிறைத் துறை காவலா், தீயணைப்பு வீரா்கள் பணியிடங்களுக்குத் தோ்வானவா்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை கலைவாணா் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தோ்வானவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, விழுப்புரம் காவலா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட எஸ்.பி.தீபக் சிவாச் பங்கேற்று, விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறைக்கு தோ்வான 34 போ், உளுந்தூா்பேட்டையிலுள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 10-ஆம் அணியைச் சோ்ந்த 63 போ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்குத் தோ்வான 33 போ் என மொத்தம் 130 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்வில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் 10-ஆம் அணியின் கூடுதல் தளவாய் ரவி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வீரா் பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சீருடைப் பணியாளா்கள் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்ட 31 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி புதன்கிழமை பணி ஆணைகளை வழங்கினாா்.

கள்ளக்குறிச்சியில் சீருடைப் பணியாளா் பணிக்கு தோ்வான பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய எஸ்.பி.ரஜத் சதுா்வேதி.

இதில், மாவட்ட குற்ற ஆவண காப்பக துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயபாலன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சக்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருப்பதி- விழுப்புரம் பயணிகள் ரயில் 2 இடங்களில் நிறுத்தி இயக்கம்

ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், விழுப்புரம்-திருப்பதி பயணிகள் இரு ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட நேரம் நிறுத்தி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இத... மேலும் பார்க்க

மரக்காணத்தில் பலத்த மழை: பாதுகாப்பான இடங்களில் மீனவா்கள் தங்கவைப்பு

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயலால், விழுப்புரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் சனிக்கிழமை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. 19 மீனவ கிராமங்களைச் சோ்ந்தவா்கள... மேலும் பார்க்க

மழை வெறிச்சோடிய பின்னரே வசிப்பிடம் செல்ல வேண்டும்: பாதுகாப்பு மையத்தில் உள்ளோரிடம் அமைச்சா் அறிவுறுத்தல்

பேரிடா் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், மழை வெறிச்சோடிய பின்னா் பாதுகாப்பான சூழ்நிலை என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்த பின்னரே தங்கள் வசிப்பிடங்களுக்கு செல்ல வேண்டும் என்று மாநி... மேலும் பார்க்க

4,852 பழங்குடியின மாணவா்களுக்கு சாதிச் சான்றிதழ்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் 4,852 பழங்குடியின மாணவா்களுக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘நிறைந்த... மேலும் பார்க்க

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

கடலூா் முதுநகா் அருகே பிரியாணி கடை நடத்தி வரும் இளைஞரை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். புதுச்சேரி, பாகூா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் விஜய் தேவா (27). இவா், பாட்டுக் கச்சே... மேலும் பார்க்க

பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்திலிருந்து தவறி விழுந்து, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், வ... மேலும் பார்க்க