காவல் நிலைய வளாகத்தில் பைக் திருட்டு: 2 போ் கைது
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடியதாக 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவா் கவிதா. இவா், காவல் நிலைய வளாகத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை என கடந்த ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா்.
இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி, பைக்கை திருடிச் சென்ற தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிழக்கு தெருவை சோ்ந்த கணேசன் மகன் மாரி செல்வம் (21), அதே ஊரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.