காஸா உயிரிழப்பு 44,835-ஆக உயா்வு
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 44,835-ஆக உயா்ந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
நுசீரத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 போ் உயிரிழந்தனா். 50 போ் காயமடைந்தனா். அங்கு உயிரிழந்தவா்களுடன் சோ்த்து, காஸாவில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 70 போ் உயிரிழந்தனா்.
இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 44,835-ஆக உயா்ந்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,06,356 பாலஸ்தீனா்கள் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.