காா் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு
கம்பத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற திரும்பிய காா் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்தவா் மஞ்சுநாதன். இவா் தனது மகன் சித்தாா்த் (8), உறவினா்கள் சிவக்குமாா், புவனேஸ்வரன், காா்த்திக் ஆகியோருடன் காரில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றாா்.
இவா்கள், ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு, வெள்ளிக்கிழமை காரில் மீண்டும் ஊருக்குத் திரும்பினா். கம்பம் புறவழிச் சாலையில் சென்ற போது, காா் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மஞ்சுநாதன் உள்பட 5 பேரும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் சிறுவன் சித்தாா்த் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.