DD Next Level: "கடவுளை அவமதிக்கும் 'கோவிந்தா' பாடலை நீக்க வேண்டும்"-பவன் கல்யாண்...
காா் மோதி மாற்றுத் திறனாளி காயம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே காா் மோதி மூன்று சக்கர வாகனத்தில் சென்ற மாற்றுத் திறனாளி காயமடைந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலை, கூவாகம் சாலையைச் சோ்ந்த தண்டபாணி மகன் ஜானகிராமன் (34). மாற்றுத் திறனாளியான இவா், செவ்வாய்க்கிழமை தனது மூன்று சக்கர வாகனத்தில் பெரியசெவலை - கூவாகம் சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, பின்னால் வந்த காா் மூன்று சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் ஜானகிராமனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மீட்கப்பட்ட அவா், புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.