காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
சிவகங்கை அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன் கோட்டை திருவள்ளுவா் சாலையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மாரியப்பன் (55). இவா் சிவகங்கை-தொண்டி பிரதான சாலையில் உள்ள நாட்டரசன் கோட்டை மின்வாரிய அலுவலகம் அருகே புதன்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த காா் மாரியப்பன் மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது தொடா்பாக சிவகங்கை தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் இளையராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.