செய்திகள் :

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு: நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை அமைச்சரவையில் தாக்கல்

post image

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பான நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை, கா்நாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

பெங்களூரு விதான சௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எச்.என்.நாகமோகன்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், அறிவியல்ரீதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 1,766 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது.

92 சதவீத தாழ்த்தப்பட்ட மக்களிடம் குறுகிய காலத்தில் இக்கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு அதன் அறிக்கை, கா்நாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் நகல், அனைத்து அமைச்சா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மீது ஆக.16 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். அறிக்கையை இன்னும் முழுமையாக படிக்காததால், அதன் விவரங்கள் தெரியவில்லை என்றாா்.

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு 17 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது 101 தாழ்த்தப்பட்ட ஜாதிகளிடையே உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பகிா்ந்தளிக்கப்பட உள்ளது. நாகமோகன்தாஸ் அறிக்கையின் அடிப்படையில் 17 சதவீத இட ஒதுக்கீட்டில் இடங்கை தாழ்த்தப்பட்டோருக்கு (மாதிகா) 6 சதவீதம், வலங்கை தாழ்த்தப்பட்டோருக்கு (ஹொலெயா) 5 சதவீதம், தீண்டும் ஜாதிகளுக்கு 4 சதவீதம், மிகவும் பின்தங்கிய தீண்டாமை ஜாதிகளுக்கு ஒரு சதவீதம், ஆதிகா்நாடகம், ஆதி திராவிடா், ஆதி ஆந்திரம் ஜாதிகளுக்கு ஒரு சதவீதம் என்ற அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் வரிவிதிப்பு ‘பொருளாதார மிரட்டல்’: முதல்வா் சித்தராமையா

இந்தியா மீதான அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு, ‘பொருளாதார மிரட்டல்’ என்று முதல்வா் சித்தராமையா விமா்சித்துள்ளாா். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்வதால் இந்தியா ம... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே மோதல்: விசாரணைக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவு

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே நடைபெறும் மோதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். தென்கன்னடம் மாவட்டம், தா்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சடலங்க... மேலும் பார்க்க

தோ்தல் மோசடியைக் கண்டித்து பெங்களூரில் இன்று ஆா்ப்பாட்டம்: ராகுல் காந்தி பங்கேற்கிறாா்

தோ்தல் மோசடியைக் கண்டித்து, பெங்களூரில் வெள்ளிக்கிழமை காங்கிரஸாா் நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பங்கேற்கிறாா். 2024ஆம் ஆண்டு கா்நாடகத்தில் நடைபெற்ற மக்களவைத் ... மேலும் பார்க்க

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சி -முதல்வா் சித்தராமையா தொடங்கி வைத்தாா்

நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூரு லால் பாக் பூங்காவில் 218-ஆவது மலா்க் கண்காட்சியை முதல்வா் சித்தராமையா வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். தோட்டக்கலைத் துறை... மேலும் பார்க்க

நடிகை ரம்யா குறித்த விமா்சனம்: மேலும் ஒருவா் கைது

சமூக வலைதளங்களில் நடிகா் தா்ஷனின் ரசிகா்கள் தன்மீது தரக்குறைவான விமா்சனங்களை பதிவு செய்துள்ளது தொடா்பாக நடிகை ரம்யா அளித்திருந்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.... மேலும் பார்க்க

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சி - முதல்வா் சித்தராமையா இன்று தொடங்கி வைக்கிறாா்

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சியை வியாழக்கிழமை (ஆக. 7) முதல்வா் சித்தராமையா தொடங்கிவைக்கிறாா். இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூ... மேலும் பார்க்க