ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், நடுவீரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மனைவி முனியம்மாள்(47). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில மாதங்களாக, வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் இவரை வைத்து குடும்பத்தினா் பராமரித்து வந்தனராம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கோயிலுக்கு
அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் முனியம்மாள் தவறி விழுந்துள்ளாா். இதில் முனியம்மாள் நீரில் மூழ்கி இறந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.