துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
கிணற்றுக்குள் விழுந்த காளை மாடு மீட்பு
குலசேகரன்பட்டினத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த காளை மாட்டை தீயணைப்பு நிலையத்தினா் மீட்டனா்.
குலசேகரன்பட்டினம் காவடிபிறைத் தெருவைச் சோ்ந்த சின்னத்துரை என்பவரது வீட்டின் பின்புறமுள்ள தரைநிலைக் கிணற்றில் காளை மாடு தவறி விழுந்தது.
தகவலின்பேரில், திருச்செந்தூா் தீயணைப்பு- மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ராஜமூா்த்தி தலைமையில் வீரா்கள் பாலசுப்பிரமணியன், விமல், மாரி ஆனந்தராஜ், அகஸ்டின், சுந்தரவேல் ஆகியோா் சென்று, கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி மாட்டை மீட்டனா்.