2 நாள்களில் 200 ஓவர்கள் பேட்டிங் பயிற்சி; பெர்த் டெஸ்ட்டுக்கு தீயாய் தயாரான ஜெய்...
கிண்டி: அரசு மருத்துவர் தாக்குதலுக்குள்ளான சம்பவம்; `நடந்தது இதுதான்..!' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள் நோயாளிகள், புற நோயாளிகள் என தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை மருத்துவமனைக்கு வந்த விக்னேஷ்வரன் என்பவர் ஓ.பி-யில் இருந்த பாலாஜி என்ற மருத்துவர் அறைக்குள் நுழைந்து, அறைக்கதவை பூட்டிவிட்டு மருத்துவரை சாரமாரியாக கத்தியால் குத்தியிருக்கிறார்.
இதில், மருத்துவருக்கு காது, கழுத்து, முதுகு போன்ற இடங்களில் கத்திக்குத்து விழுந்திருக்கிறது. மருத்துவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்களும், சக ஊழியர்களும் வந்திருக்கின்றனர். உடனே கத்தியால் குத்தியவர் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். அங்கிருந்த மருத்துவர்கள், கத்திக்குத்து வாங்கிய மருத்துவர் பாலாஜியை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்திருக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், ``மருத்துவமனை அருகில்தான் காவல் நிலையம் இருக்கிறது. இங்கு மருத்துவர்களுக்கு உரியப் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவரின் தாயார் ஏற்கெனவே இங்கு சிகிச்சை பெற்றிருக்கிறார். அவருக்கு உதவியாளராக இருந்தவர்தன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர். அவர் பெயர் விக்னேஷ்வரன். பெருங்களத்தூரைச் சேர்ந்தவர். வழக்கமாக வருபவர் என்பதால் அவர்மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கிடையில், அவரின் அம்மாவுக்கு ஆறு முறை ஹிமோதெரபி சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள்.
அதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை எனத் தெரிகிறது. அதனால், அவர் வெளியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததாக கூறுகிறார்கள். அங்கு இந்த மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என தவறான தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதனால் ஆத்திரப்பட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். இது தொடர்பாக காவல்துறை விசாரித்து வருகிறது. தற்போது மருத்துவர் சிகிச்சையில் இருக்கிறார். அவரின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை." எனக் விளக்கமளித்திருக்கிறார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், ``உயிர்காக்கும் அவசர சிகிச்சையைத் தவிர வேறு சேவைகள் வழங்கப்பட்டாது" என வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது.