கிண்டி: "நலமுடன் இருக்கிறேன்; முதல்வரிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான்..." - மருத்துவர் பாலாஜி
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பாலாஜியை, விக்னேஸ்வரன் என்பவர் நேற்று (நவம்பர் 13) காலை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில், விக்னேஸ்வரனை காவல்துறை கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர். மருத்துவர் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேவேளையில், மருத்துவர் பாலாஜி அலட்சியமாகச் சிகிச்சை அளித்ததாகவும், மன உளைச்சல் தரும் விதத்தில் பேசியதாகவும், அதனால் கோபமான தன் மகன் விக்னேஷ்வரன் ஆத்திரத்தில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியதாகவும் விக்னேஸ்வரனின் தாயார் பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜி, தான் நலமுடன் இருப்பதாகப் பேசியிருக்கிறார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், "நான் நலமுடன் இருக்கிறேன். நான் ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகளே உள்ளன. அந்தக் காலகட்டத்திலும் கலைஞர் மருத்துவமனையிலேயே தொடர்ந்து மருத்துவ சேவை செய்ய அனுமதித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மருத்துவர் பாலாஜி கேட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs