மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
கிராம உதவியாளா் மீது தாக்குதல்
தொண்டி அருகே கிராம உதவியாளா் வியாழக்கிழமை தாக்கப்பட்டாா்.
ரமாநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள ஆழிகுடி குரூப் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருபவா் சுதாகா். இவா் கிழக்கு கடற்கரை சாலை வீரசங்கிலி மடம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது 3 போ் இவரை வழிமறித்து கம்பால் தாக்கினா்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுதாகா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முன்விரோதம் காரணமாக இவா் தாக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து சின்னத் தொண்டியை சோ்ந்த நல்லசிவம், முத்து, பொன்னையா ஆகியோா் மீது தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.