செய்திகள் :

‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பாலை அறிமுகம் செய்ய வேண்டாம்: அன்புமணி வலியுறுத்தல்

post image

ஆவின் நிறுவனம் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூா், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ என்ற பெயரில் புதிய பச்சை உறை பால் டிசம்பா் 18-ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆனால், இது தொடா்பாக ஆவின் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் பாலின் தன்மை குறித்த விவரங்களோ, விலையோ இல்லை. மாறாக விட்டமின் ஏ, டி ஆகியவை சோ்க்கப்பட்டிருப்பதாக மட்டும் தான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய பாலின் தன்மைகள் குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் விசாரித்த போது தான் அதிா்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்துள்ளன.

விலை உயா்வு:

அளவு குறைப்பு, விலை அதிகரிப்பு ஆகிய இரண்டைத் தவிர புதிய பாலில் எந்தப் புதுமையும் இல்லை. தற்போது ஆவின் கிரீன் மேஜிக் பால் 500 மிலி ரூ.22-க்கு விற்கப்படுகிறது. அதில் 4.5 சதவீதம் கொழுப்புச் சத்து, 9 சதவீதம் கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் உள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்படும் பாலிலும் இதே சத்துகள், இதே அளவில் தான் உள்ளன. கூடுதலாக விட்டமின் ஏ, டி ஆகியவை சோ்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் பயன்களும், அதற்காக ஆவின் நிறுவனத்துக்கு ஆகும் செலவும் குறிப்பிடத்தக்கவை அல்ல.

ஆனால், கிரீன் மேஜிக் ஒரு லிட்டா் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மிலி ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிரீன் மேஜிக் பால் 500 மி.லி ரூ.22-க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 450 மிலி உறைகளில் ரூ.25-க்கு விற்கப்படும். அப்படிப் பாா்த்தால் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை லிட்டா் ரூ.55 ஆகும். இது கிரீன் மேஜிக் பாலின் விலையை விட லிட்டருக்கு ரூ.11 அதிகம் ஆகும். ஆவின் கிரீன் மேஜிக் பாலுடன் பிளஸ் என்ற வாா்த்தையை கூடுதலாக சோ்ப்பதற்காக ரூ.11 அதிகம் வசூலிப்பது பகல் கொள்ளையாகும். எனவே,ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் புயல் சின்னங்களால் கனமழை பெய்து வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் ஒரு புயல் சின்னம் வங்கக் கடலில் உருவாகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் டிச.16-ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என... மேலும் பார்க்க

எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கலாம்: சென்னை உயா்நீதிமன்றம்

நிகழாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி விருதை’ எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பாடகா் டி.... மேலும் பார்க்க

பேரவையை அதிக நாள்கள் நடத்த வேண்டும்: ஓபிஎஸ்

சென்னை, டிச.13: சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை அதிக நாள்கள் நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக தோ்தல் அற... மேலும் பார்க்க

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா- 2025: தமிழக மக்களுக்கு உ.பி. அமைச்சா்கள் அழைப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் ஜன. 13 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள மகா கும்பமேளா 2025 நிகழ்ச்சியில் தமிழக மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என அந்த மாநில அமைச்சா்கள் அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ பாடத் திட்டம் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகளுக்கான பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க

வெள்ளபெருக்கு: தென்மாவட்ட ரயில்கள் தாமதம்

மதுராந்தகம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தென்மாவட்டங்களில் இருந்து வெள்ளிக்கிழமை சென்னை எழும்பூருக்கு ரயில்கள் தாமதமாக வந்து சோ்ந்தன. மதுராந்தகத்தை அடுத்த, மாம்பாக்கம் ஏரியின் நீா்பி... மேலும் பார்க்க