செய்திகள் :

கிருஷ்ணகிரி: "நானும் கலெக்டர் ஆவேன்" - கனவைச் சொன்ன சிறுமி; நெகிழ வைத்த கலெக்டர்; என்ன நடந்தது?

post image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மணியம்பட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி திஷியா(8). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறோம்.

பெற்றோரை இழந்த நிலையில், தனது பாட்டியுடன் சிறுமி திஷியா வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது உறவினர்களுடன் கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பம் பெற வேண்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அங்குக் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை அலுவலகத்திற்குச் சென்ற சிறுமி திஷியா அங்கிருந்த அதிகாரிகளிடம், "நானும் படித்து மாவட்ட ஆட்சியர் ஆகப் போகிறேன்" எனக் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி ஆட்சியர்
கிருஷ்ணகிரி ஆட்சியர்

அங்கிருந்த அதிகாரிகள் சிறுமியை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமி திஷியாவிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், "நீ படித்து என்ன ஆகப்போகிறாய்?" எனக் கேட்டுள்ளார். அப்போது சிறுமி திஷியா, "நானும் உங்களைப் போலவே ஆட்சியர் ஆகப் போகிறேன்" என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த ஆட்சியர் உடனடியாக சிறுமிக்குத் தனது அலுவலக அறையைச் சுற்றிக் காட்டினார். பின்னர், சிறுமியை நுழைவாயிலுக்கு அழைத்து வந்த ஆட்சியர், தனது காரில் முன் இருக்கையில் சிறுமியை அமர வைத்து ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றிக் காண்பிக்கச் செய்தார்.

தொடர்ந்து, சிறுமியிடம் பேசிய ஆட்சியர், "நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் பெற வேண்டும். உயர் கல்வியிலும் சிறந்து விளங்கி ஆட்சியராக வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"குரூப் 4 தேர்வில் எந்தக் குளறுபடியும் நடக்கவில்லை; 3 மாதங்களில்..." - TNPSC விளக்கம்!

சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்... மேலும் பார்க்க

Pawan: பவன் கல்யாண் படத்தின் பிரீமியர் ஷோவிற்கு அனுமதி; கூட்ட நெரிசல் ஆபத்து; வெடிக்கும் சர்ச்சைகள்!

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த பவன் கல்யாண், அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.சினிமாவில் இருந்து ஓய்வு பெறாமல் துண... மேலும் பார்க்க

ஏமன் கொலை வழக்கு: நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தா? - வெளியாகும் தகவலின் பின்னணி என்ன?

ஏமன் நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி மரண தண்டனைக்குள்ளான கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, ஜூலை 16-ம் தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்தது.மத்திய அரசு தரப்பிலிருந... மேலும் பார்க்க

விருதுநகர்: ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகள்; தற்காலிகமாக மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் 680 பட்டாசுத் தொழிற்சாலைகள், மாவட்ட வருவாய் அலுவலர் பிரிவின் கீழ் 400 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 1080 பட்டாசு... மேலும் பார்க்க

வாணியம்பாடி: இடிந்து விழும் நிலையில் நூலகம்; சேதமடையும் புத்தகங்கள்... கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட உதயந்தேரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலகம், 13,500 வாசகர்களுடனும், காலை மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து செல்லும் அறி... மேலும் பார்க்க

வங்கதேச விமான விபத்து: `தீயில் எரிந்து கொண்டிருந்தனர்; கல்லாக...'- நேரில் பார்த்த ஆசிரியர் வேதனை!

நேற்று (ஜூலை 21) பிற்பகல் 1 முதல் 2 மணி அளவில் நடந்த வங்கதேச ராணுவ விமான விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி வளாகத்தில் வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான எஃப் -... மேலும் பார்க்க