சேதுபாவாசத்திரத்தில் மழை நீர் வடிகால் வாய்க்காலில் மூழ்கி குழந்தை பலி
கிறிஸ் கெயில் சாதனையை சமன்செய்த டிம் சௌதி!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டிம் சௌதி கிறிஸ் கெயில் சாதனையை சமன்செய்துள்ளார்.
டெஸ்ட்டில் கிறிஸ் கெயில் 98 சிக்ஸர்கள் அடித்துள்ளார். டிம் சௌதி தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார்.
முதல் இன்னிங்ஸில் டிம் சௌதி 10 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் 98 சிக்ஸர்களுடன் அதிரடி பேட்டர் கிறிஸ் கெய்ல் உடன் சமன்செய்துள்ளார்.
இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் கூடுதலான சிக்ஸர்கள் அடித்தால் புதிய சாதனை படைக்க வாய்ப்பிருக்கிறது.
107ஆவது டெஸ்ட்டில் விளையாடும் 36 வயதான டிம் சௌதி 389 விக்கெட்டுகளும் 2,243 ரன்களும் அடித்துள்ளார். இதில் 98 சிக்ஸர்கள், 215 பவுண்டரிகள் அடங்கும்.
முதல்நாள் முடிவில் நியூசிலாந்து 315/9 ரன்கள் எடுத்துள்ளது. ஏற்கனவே 0-2 என நியூசி. இந்தத் தொடரினை இழந்தாலும் கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக போராடி வருகிறது.
டெஸ்ட்டில் அதிகமாக சிக்ஸர்கள் அடித்தவர்கள்
1. பென் ஸ்டோக்ஸ் - 133 சிக்ஸர்கள் (110 போட்டிகள்)
2. பிரண்டன் மெக்குல்லம் - 107 சிக்ஸர்கள் (101 போட்டிகள்)
3. ஆடம் கில்கிறிஸ்ட் - 100 சிக்ஸர்கள் (96 போட்டிகள்)
4. டிம் சௌதி - 98 சிக்ஸர்கள் (107 போட்டிகள்)
5. கிறிஸ் கெயில் - 98 சிக்ஸர்கள் (103 போட்டிகள்)