செய்திகள் :

கில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் அறிவிப்பு!

post image

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் கில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று(ஜூலை 19) மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தமிழில் குஷி, வாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் இயக்குராக களமிறங்கியுள்ளார்.

இவர் கடைசியாக 2015-இல் இசை என்ற படத்தை இயக்கியிருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லர் என்ற புதிய படத்தை இயக்குகிறார்.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கோபாலன், ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எஸ்.ஜே.சூர்யா சார்பில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.

இந்த நிலையில், கில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று மாலை 6.09 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: குழந்தையை தூங்க வைத்த மகிழ்ச்சியில் நடனமாடிய கண்மணி மனோகரன்! வைரல் விடியோ!

The team has announced that the first look poster of the upcoming film Killer, directed by S.J. Surya, will be released this evening (July 19).

அஜித் படத்தை இயக்குகிறேனா? ஆதிக் பதில்!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்துடன் இணைவது குறித்து பேசியுள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அ... மேலும் பார்க்க

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரமின் பைசன்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரமின் பைசன் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கபடி விளையாட்டை மையமாக வைத்து பைசன் என்கி... மேலும் பார்க்க

ஆல்பம் பாடல்களில் கவனம் செலுத்தும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!

ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆல்பம் பாடல்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக வெற்றிப் படங்களைக் கொடுத்த வெற... மேலும் பார்க்க

லோக சுந்தரன்! வைரலான மோகன்லாலின் விளம்பர விடியோ!

நடிகர் மோகன்லாலின் புதிய விளம்பர விடியோவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நடிகர் மோகன்லால் எம்புரான், துடரும் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் ஹிருதயப்பூர்வம் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திரு... மேலும் பார்க்க

தனுஷின் இட்லி கடை படத்தின் பாடல் வெளியீடு எப்போது? ஜிவி பிரகாஷ் அப்டேட்!

தனுஷின் இட்லி கடை படத்தின் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ராயன் படத்தை இயக்கி நடித்த நடிகர் தனுஷ், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பி... மேலும் பார்க்க

பன்முகத் திறன் பெற்ற மு.க. முத்து!

சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து, திறமையான ஒரு நடிகர் மட்டுமல்ல; பாடகரும்கூட. பன்முகத் திறன் பெற்றிருந்த மு.க. முத்து, அரசியல் சூழலாலும் காலத்தின் கோலத்தால... மேலும் பார்க்க