தென்காசியில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு: மாற்றுத்திறனாளிகள் மறுவா...
கிள்ளியூரில் திமுக ஆலோசனைக் கூட்டம்
கிள்ளியூரில் வடக்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வடக்கு ஒன்றியச் செயலா் ராஜன் தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத்தலைவா் தாமஸ் முன்னிலை வகித்தாா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்க வேண்டும். ஹிந்தி திணிப்பை எதிா்த்து தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருங்கல் பேரூா் செயலா் அருள்ராஜ், பேரூா், ஊராட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.