செய்திகள் :

கிள்ளியூர்: காங்கிரஸ் அமைச்சர் தொகுதியில் மறு தேர்தல் நடத்த தவெக வேட்பாளர் மனு; கூட்டணியில் குழப்பம்

post image

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றில்கூட த.வெ.க வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் மூன்றாம் இடத்திலும், மீதமுள்ள 5 தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தையும் பிடித்தது த.வெ.க. அதே சமயம் காங்கிரஸ் போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் வென்றது. கிள்ளியூர் தொகுதியில் 1,311 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வென்றது. த.வெ.க கூட்டணியில் காங்கிரஸ் இணைந்ததை அடுத்து, கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராஜேஷ்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சராக ஆன பிறகு, த.வெ.க மேற்கு மாவட்டச் செயலாளர் சபினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்திருந்தார் ராஜேஷ்குமார். இந்த நிலையில் கிள்ளியூர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும், சில வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும் த.வெ.க சார்பில் போட்டியிட்ட சபின் தேர்தல் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். த.வெ.க கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளரும், கிள்ளியூர் தொகுதியில் வேட்பாளருமாகப் போட்டியிட்ட சபின்,  இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

`கடந்த மே மாதம் 4-ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது, தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் பெரும் முரண்பாடுகள் இருந்தது. சுமார் 4,500 தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில், வெறும் 2,500 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அப்போதே முறையிட்டும், இறுதி முடிவுக்கு முன்னதாகச் சரி செய்யப்படும் என அளிக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.

த.வெ.க மாவட்டச் செயலாளரைச் சந்தித்த அமைச்சர் ராஜேஷ்குமார்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) செயல்பாட்டிலும் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. குறிப்பாக, வாக்குச்சாவடி எண் 169-ல் இருந்த இயந்திரத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய நேரம் காலை 5:45 மணி எனக் காட்டியது. இது இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதேபோல் வாக்குச்சாவடி எண் 76-ல் இருந்த இயந்திரத்திலும் பதிவான வாக்குகளைச் சரிபார்ப்பதில் சிக்கல்கள் இருந்தது. வாக்கு எண்ணிக்கையின் 18 முதல் 22 வரையிலான சுற்றுகள் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றி நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றின் முடிவுகளையும் தனித்தனியாக அறிவிக்காமல், பல சுற்றுகளை ஒன்றிணைத்து ஒட்டுமொத்தமாக அறிவித்தது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.

கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார்

வேட்பாளர் மற்றும் அவரது முகவர்கள் எழுப்பிய நியாயமான ஆட்சேபனைகளுக்குத் தேர்தல் அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்காமல் அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்தது, ஜனநாயகத்திற்கு எதிரானது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட 76 மற்றும் 169 ஆகிய வாக்குச்சாவடிகளில் உடனடியாக மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். மற்ற இயந்திரங்கள் மற்றும் தபால் வாக்குகளை மீண்டும் ஒருமுறை முறையாக மறு எண்ணிக்கை செய்ய வேண்டும். தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மையையும், நேர்மையையும் உறுதி செய்ய, தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்."

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். கூட்டணியில் இருந்தும் காங்கிரஸ் அமைச்சரின் தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்தும்படி தேர்தல் கமிஷனுக்கு த.வெ.க வேட்பாளர் மனு அளித்துள்ளது, இரு கட்சி நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

'அது நான் இல்லை, போதைப்பொருள் கடத்தலுக்கும், எனக்கும்.!'- லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ

போதைப் பொருள் கடத்தலுக்கும், எனக்கும் தொடர்பில்லை என அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ விளக்கம் அளித்திருக்கிறார். ரூ.258 கோடி மதிப்பிலான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வழ... மேலும் பார்க்க

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக மா. செ; வெடித்த கோஷ்டி மோதல்; பேசுபொருளான அமைச்சரின் திண்டுக்கல் விசிட்!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மதுவிலக்கு ஆயர்த்தீர்வை அமைச்சர் விக்னேஷ், நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லுக்கு வந்து தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். அவரைப் பார்... மேலும் பார்க்க

"ஊழல் குறைந்திருக்கிறது; தற்போதைய மின்வெட்டுக்கு திமுக ஆட்சியே காரணம்!" - முதல்வரை சந்தித்த அன்புமணி

முதல்வர் விஜய்யை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமைச் செயலகம் சென்று இன்று (ஜூன்.9) சந்தித்து பேசியிருக்கிறார். முதல்வருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அன்புமணி, " சமூகநீதி க... மேலும் பார்க்க

நெல்லை: 'விஜய் படத்தின் கீழ் அமர மாட்டேன்!' - இருக்கையை இடமாற்றிய மேயர்

அரசு அலுவலகங்களில் தமிழக முதலமைச்சர் புகைப்படம் வைக்க வேண்டும் என்ற் அரசாணை உள்ளது. ஆனாலும், திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பு வகிக்கும் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்... மேலும் பார்க்க

'வெளிச்சம் டிவியை கட்டியெழுப்பியது யார்?' - சீண்டிக்கொள்ளும் சிறுத்தைகள்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருந்தார். விசிகவின் அதிகாரப்பூர்வ சேனலான 'வெளி... மேலும் பார்க்க

இஸ்ரேலின் முக்கிய நகரில் பிரமாண்ட சிவாஜி சிலை நிறுவப்படுகிறது! - பின்னணி என்ன?

இந்திய தலைநகர் புது டெல்லிக்கும் இஸ்ரேலின் டெல் அவிவ்விற்கும் இடையே வளர்ந்து வரும் கலாச்சார மற்றும் மூலோபாய உறவுகளின் ஒரு புதிய மைல்கல்லாக, இஸ்ரேலில் மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் திருவு... மேலும் பார்க்க