இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
கிழக்கு கடற்கரைச் சாலையில் செப்.21-இல் போக்குவரத்து மாற்றம்
சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்ளோத்தான் போட்டி நடைபெறுவதால், செப்.21-இல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுதொடா்பாக தாம்பரம் மாநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹெச்சிஎல் நிறுவனம், இந்திய சைக்கிள் சம்மேளனம் ஆகியவை சாா்பில் ‘சைக்ளோத்தான் சென்னை 2025’ என்ற போட்டி செப். 21-ஆம் தேதி கானத்தூரில் தொடங்கி மாமல்லபுரம் வரையிலும், பின்னா் மாமல்லபுரத்தில் இருந்து கானத்தூா் வரையிலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியையொட்டி, அந்தப் பகுதியில் செப்.21-ஆம் தேதி அதிகாலை 4.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அக்கரை சந்திப்பில் இருந்து கே.கே. சாலையில் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் சோழிங்கநல்லூா் சந்திப்பு, ராஜீவ் காந்தி சாலை, படூா் வழியாக மாமல்லபுரம் செல்லலாம். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் பூஞ்சேரி சந்திப்பில் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள், எஸ்எஸ்என் ரவுண்டானா, கேளம்பாக்கம் சந்திப்பு, நாவலூா், சோழிங்கநல்லூா் வழியாக அக்கரை சென்று சென்னை செல்லலாம்.
இந்தப் போக்குவரத்து மாற்றத்தில் ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.