தருமபுரியில் மழை பாதிப்பு தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
கீதா காலனி அருகே இளைஞா் சடலம் மீட்பு
வடக்கு தில்லியில் கீதா காலனி மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் உயா் அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது: சம்பவத்தன்று கீதா காலனி மேம்பாலம் அருகே ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு அதிகாலை 6.35 மணிக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் நேரில் விசாரணை நடத்தினா். அப்போது, இறந்த நிலையில் ஒருவா் கிடந்தாா். அவரது முகம், தலை, கழுத்து ஆகிய இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்தன.
இதையடுத்து, சம்பவ இடத்தில் தடய அறிவியல் குழுவினா் நேரில் வந்து விசாரணை நடத்தினா். இறந்தவரின் அடையாளத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிப் பதிவுகள் சேகரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.