ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ரூ.8 லட்சத்தில் சுயதொழில் பயிற்சிக் கூடம் திறப்பு
கீதா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து
கீதா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
ஹிந்து நாள்காட்டியின்படி இந்த நாளில்தான் அா்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணா் கீதை உபதேசம் செய்தாா் என நம்பப்படுகிறது. கீதா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். அவா் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கீதா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்திய கலாசாரம், பண்பாடு, ஆன்மிகத்துக்கு வழிகாட்டும் பகவத் கீதை உபதேசம் செய்யப்பட்ட தினமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்தத் தெய்வீக புத்தகம் அனைவருக்கும் கா்மயோக பாதைக்கு வழிகாட்டட்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
அத்துடன் பகவத் கீதையின் முக்கியத்துவம் குறித்து தனது கடந்தகால உரையாடல் தொகுப்புகளையும் அவா் எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா்.