செய்திகள் :

குகேஷ் வெற்றிக்கு நம்.1 செஸ் வீரர் கார்ல்சென் கூறியதென்ன?

post image

உலகின் நம்.1 செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சென் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் உலக சாம்பியன் டிங் லிரெனை 18 வயது இந்திய வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாக்னஸ் கார்ல்சென் கூறியதாவது:

இது குகேஷின் நம்பமுடியாத சாதனை. முதலில் ஃபிடே சர்க்யூட்டில் சென்னையில் வென்றார். பின்னர், கேண்டிடேட் செஸ் தொடரில் வென்றார்.

குகேஷ் வெற்றிபெறுவாரென பலரும் நினைத்தார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக பல போட்டிகள் சமநிலையில் முடிந்தன. எதிர் தரப்பினரை கடைசிவரை நம்பிக்கைக் கொடுத்து திடீரென முடித்துவிட்டார்.

குகேஷ் முதலிடம் பிடிப்பார்

இந்த வெற்றி குகேஷுக்கு உத்வேகம் அளிக்கும். அநேகமாக தற்போது நம்.2 வீராராக மாறுவார். வருங்காலங்களில் முதலிடத்துக்கும் வருவார்.

நான் எப்போதும் பாதிப்பு குறைவான வெள்ளைநிற காய்களுடன் செல்வேன். டிங் லிரென் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம்.

இந்தியாவுக்கு பல வெற்றிகள் காத்திருக்கின்றன. குகேஷ் இந்த வெற்றியுடன் நிற்கப்போவதில்லை. குகேஷ் வென்ற தருணத்தைப் பார்க்கும்போது மிகவும் அழகாக இருந்தது என்றார்.

திருவண்ணாமலையில் காணும் இடமெல்லாம் பக்தர்கள் வெள்ளம்!

திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படும் நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் இறைவன் ஜோதி ரூபமாய் காட்சிதரும் மலையில் குவிந்துள்ளனர். பஞ்சபூத தலங்ளில் அக்னிஸ்தமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலே... மேலும் பார்க்க

ஏ சான்றிதழுடன் வெளியாகும் மார்கோ திரைப்படம்!

கருடன் படத்தில் நடித்து தமிழில் பிரபலமான உன்னி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள மார்கோ திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இந்... மேலும் பார்க்க

உலக சாம்பியன்ஷிப் வென்றாலும் நான் சிறந்த வீரரில்லை: குகேஷ்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் டி. குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற 14வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டிங் லிரெனை 58வது நகர்த்தலில் க... மேலும் பார்க்க

நடிகர் அல்லு அர்ஜுன் கைது..!

நடிகர் அல்லு அர்ஜுன் கைதுசெய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் ச... மேலும் பார்க்க

வரம் தரும் வாரம்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிசம்பர் 13 - 19) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)வருமானம் உயர... மேலும் பார்க்க

செல்வராகவன் பட போஸ்டரை வெளியிடும் தனுஷ்!

இயக்குநராக விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற செல்வராகவன் சில காலம் திரைப்படங்களை இயக்குவதிலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு திரைப்படங்களில் நடிகராக நடித்து வருகிறார். இறுதியாக, சொர்க்கவாசல் படத்தில் ... மேலும் பார்க்க