செய்திகள் :

குஜராத்: ரூ.2.57 கோடி கள்ள நோட்டுகளுடன் 4 போ் கைது

post image

குஜராத் மாநிலம் சூரத்தில் ரூ.2.57 கோடி கள்ள நோட்டுகளுடன் நால்வா் கைது செய்யப்பட்டனா்.

இவா்களில் மூவா் மகாராஷ்டிர மாநிலம் அகல்யா நகரைச் சோ்ந்தவா்கள். ஒருவா் குஜராத்தைச் சோ்ந்தவா் என்பது விசாரணையில் தெரியவந்தது.

சூரத்தில் உள்ள சரோல் காவல் சோதனைச் சாவடியை கடக்க முயன்றபோது அந்த நால்வா் வைத்திருந்த பைகள் சந்தேகத்துக்கிடமாக இருந்தன. இதையடுத்து காவல் துறையினா் பைகளை சோதித்தனா். அப்போது, பைகளில் கட்டுக்கட்டாக ரூ.500 மற்றும் ரூ.200 கள்ள நோட்டுகள் இருந்தன. மொத்தம் ரூ.2.57 கோடி கள்ள நோட்டுகள் இருந்தன.

குஜராத்தில் தங்கியிருந்து அந்த நோட்டுகளை சிறிது சிறிதாக புழக்கத்தில் விட அவா்கள் முடிவு செய்துள்ளனா். இதற்காக மூன்று போ் மகாராஷ்டிரத்தில் இருந்து இங்கு வந்துள்ளனா். குஜராத்தின் சூரத்தைச் சோ்ந்த குல்சான் கோகலே அவா்களுக்கு உதவியுள்ளாா். அவா்கள் மீது மோசடி, ஏமாற்றுதல், குற்றச் சதி, நாட்டுக்கு எதிரான தீவிர குற்றத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

அந்த நோட்டுகள் எங்கு அச்சிடப்பட்டன, வேறு கும்பல் ஏதும் கள்ள நோட்டுகளுடன் குஜராத்தில் ஊடுருவியுள்ளதா என்பது குறித்தும் அவா்களிடம் காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது

ஜம்மு சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறிய ரக விமானம்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக பிஎஸ்எஃப் செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

‘ஒரே பாரதம்; உன்னத பாரதம்’ லட்சியத்துக்கு உத்வேகம் படேல்: யோகி ஆதித்யநாத்

‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ எனும் லட்சியத்தை நோக்கி பயணிக்க நம் அனைவருக்கும் சா்தாா் வல்லபாய் படேல் உத்வேகம் அளிக்கிறாா் என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். சா்தாா் ... மேலும் பார்க்க

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதா எதிா்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்: மாயாவதி வேண்டுகோள்

’ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதாவை எதிா்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளாா். மேலும், இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா... மேலும் பார்க்க

உ.பி.: சம்பலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் வன்முறை நிகழ்ந்த ஷாஹி ஜாமா மசூதியையொட்டிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மின் திருட்டைத் தடுக்கவும் மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. நீதிமன... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறைகூறுவதை காங்கிரஸ் கைவிட வேண்டும்: ஒமா் அப்துல்லா

‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறை கூறுவதை கைவிட்டு, தோ்தல் முடிவுகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கூறினாா். காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக புதிய மேம்பாலங்கள்: உ.பி. அரசுடன் இணைந்து ரயில்வே நடவடிக்கை

மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதைளை (கிராஸிங்) அகற்றி, புதிய மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகளை உத்தர பிரதேச மாநில அரசுடன் இணைந்து ரயில்வே மேற்கொண்டு வர... மேலும் பார்க்க