செய்திகள் :

குஜராத்திலிருந்து.. ஆந்திரம் வரை.. சீரியல் கில்லரை பிடித்தது எப்படி? சிசிடிவி மட்டுமல்ல

post image

குஜராத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ராகுல் ஜத் என்ற இளைஞரைத் தேடியபோதுதான், அவர் இந்த ஒரு வழக்கில் மட்டுமல்ல, பல தொடர் கொலைகளை அரங்கேற்றியவர் என்ற அதிர்ச்சித் தகவல் காவல்துறைக்குக் கிடைத்தது.

பொருள்களை கொள்ளையடிப்பதற்காக ரயில்களில் கொலை செய்யும் ஒரு சீரியல் கில்லர் என்பதையும், கடந்த 25 நாள்களில் மட்டும் நான்கு மாநிலங்களில் 5 கொலைகள் செய்திருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்து அவரைத் தேடினர்.

ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, குஜராத் மாநிலதில் 30 வயது ராகுல் ஜத் என்பவரை கைது செய்து விசாரணை செய்த காவல்துறையினர், அவர் ஹரியாணாவைச் சேர்ந்தவர் என்பதும், குஜராத் உள்பட 4 மாநிலங்களில் அவர் மீது ஏராளமான கொலை வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மாற்றுத்திறனாளி என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ராகுல் கொலை மற்றும் கொள்ளைகளை ரயில் நிலையங்களிலும் ரயிலிலும்தான் செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 14ஆம் தேதி, உட்வாடா ரயில் நிலையம் அருகே, 19 வயது இளம்பெண் உடல் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், அவர் பனிரெண்டாம் வகுப்புப் படித்து வந்ததும், பயிற்சி வகுப்புக்குச் சென்று திரும்பியபோது பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கொல்லப்பட்ட பெண், பலாத்காரம் செய்து கொல்லப்படுவதற்கு முன்பு, பின்னால் இருந்து தலையில் தாக்கப்பட்டுள்ளார் என்று உடல்கூறாய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், சடலத்துடன் உறவு கொள்ளும் குணம் கொண்டவரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

ரயில் நிலையம் அருகே இருந்த சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளியை அடையாளம் கண்ட காவல்துறையினர், மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போதுதான், அவர் அண்மையில் லஜ்போர் மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர் என்று காவல்துறையினர் அடையாளத்தைக் கண்டறிந்தனர். அவர் 24ஆம் தேதி குஜராத்தில் கைது செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, தெலங்கானா மாநிலம் செகுந்தராபாத் அருகே ரயிலில், மற்றொரு பெண்ணைக் கொன்று பொருள்களை கொள்ளையடித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மாற்றுத்திறனாளி என்பதை அவருக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மிகத் தைரியமாக இதுபோன்ற கொலை மற்றும் கொள்ளைகளை நிகழ்த்தி வந்துள்ளார்.

அவர் மீது ஒன்றல்ல, இரண்டல்ல கொலை, கொள்ளை என பல்வேறு மாநிலங்களில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என குஜராத் காவல்துறை, பல்வேறு மாநில குற்றப்பதிவுகளை ஆராய்ந்தபோது கிடைத்திருக்கிறது.

ராகுலின் இருப்பிடத்தைக் கண்டறிவது சவாலாக இருந்தது. அவர் ஓரிடத்திலிருந்து, வெகு தொலைவில் இருக்கும் மற்றொரு இடத்துக்கு நாள்தோறும் பயணித்துக்கொண்டே இருந்துள்ளார். இளம் பெண் கொலை செய்யப்பட்ட வால்சத் ரயில் நிலைய சிசிடிவி கேமராவில் குற்றவாளி, கொலை செய்த பெண்ணின் உடையை அணிந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைக்கொண்டு அவர் ஏறிய ரயில், அடுத்தடுத்து அந்த ரயில் நின்ற ரயில் நிலையங்கள், அது கடைசியாக சென்றடைந்த இடம் என ஒரு இடத்தையும் விடாமல் தேடியிருக்கிறார்கள். அவரது நடமாட்டங்களை கண்காணிக்க ரயில் நிலையங்களிலிருந்த 2000 சிசிடிவி கேமராக்கள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. இந்தப் பணிக்காக மட்டும் 400 காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, குஜராத்திலிருந்து அவர் ஆந்திரம் சென்றதை வெறும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மட்டும் காவல்துறை கண்டுபிடித்திருக்கிறது.

இதுவரை கர்நாடகம், மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களிலும் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் அவர் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வந்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில், சோலாபூர் ரயில் நிலையம் அருகே ரயிலில் ஒரு பெண்ணைக் கொலை செய்ததாகவும், மேற்கு வங்க மாநிலம் ஹௌரா ரயில் நிலையம் அருகே முதியவரைக் கொன்று கொள்ளையடித்ததாகவும் கர்நாடகத்தில் ஒரு கொலை செய்திருப்பதகாவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்கிறார்கள் காவலர்கள். முதலில் இவரது புகைப்படத்தை சிசிடிவியில் இருந்து எடுத்ததும் அதனை டிஜிட்டலில் வைத்து சோதித்தபோது, அது லஜ்புர் ஜெயில் இவரைத் தேட சுமார் 2,000 சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆராய்ந்துள்ளனர். இதற்கு முன்பு, ஆயுதக் கடத்தல், டிரக் திருட்டு என பல்வேறு மாநிலங்களில் பல காலக்கட்டங்களில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரயிலில், பெண்கள் அல்லது முதியவர்கள் தனியாக இருக்கும் போது இரவு நேரத்தில் அவர்களிடமிருந்து பொருள்களைக் கொள்ளையடித்து, பலாத்காரம் செய்வது, கொலை செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார்.

புனே - கன்னியாகுமரி ரயிலில் 2023ஆம் ஆண்டு அக். மாதம் நடந்த பெண் கொலை வழக்கிலும் இவருக்குத் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் என ஒரு மாநிலத்தில் குற்றம்செய்ததும், தொலைவில் உள்ள மற்றொரு மாநிலத்துக்கு டிக்கெட் எடுக்காமலேயே ரயில் மூலம் சென்று அங்கு மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டுவிட்டு, மற்றொரு மாநிலத்துக்குச் சென்றிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பயண வழிகளிலேயே மிகப் பாதுகாப்பானது ரயில் பயணம் என்றுதான் மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்களைப் போன்றவர்களால் அபாயப் பயணமாக மாறியிருப்பதை ரயில்வே காவல்துறையினர் கண்டறிந்து, இரவு நேரங்களில் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தினால் குற்றவாளிகளைத் தேடி அலைவதைத் தடுக்கலாம் என்கிறார்கள் மக்கள்.

உ.பி.யின் சம்பாலில் மீண்டும் இணைய சேவை

உ.பி.யின் சம்பாலில் பதற்றம் தணிந்த நிலையில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சம்பாலில் இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டன என்று மாவட்ட தகவல் அதிகாரி பிரிஜேஷ் குமார் ... மேலும் பார்க்க

புற்றுநோய் சிகிச்சை பற்றி.. ரூ.850 கோடி கேட்டு நவ்ஜோத் சிங் சித்து மனைவிக்கு நோட்டீஸ் வந்தது ஏன்?

காங்கிரஸ் கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் சித்துவுக்கு சத்தீஸ்கர் சிவில் சொசைட்டியிலிருந்து ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.பாரம்பரிய மருத்துவ முறையில் புற... மேலும் பார்க்க

ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ஓ. பன்னீர்செல்வம் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.2001 - 2006ஆம் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் பலி!

மகாராஷ்டிரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், பந்தாராவிலிருந்து அரசுப் பேருந்து 36 பயணிகளுடன் காண்டியா மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

கடைசி ஒரு மணி நேரத்தில் 76 லட்சம் வாக்குகள் பதிவானது எப்படி? - தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி!

மகாராஷ்டிர தேர்தலில் முரண்பாடுகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. மகாராஷ்டிரத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி வெற்ற... மேலும் பார்க்க

வங்கதேசம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மௌனம் காக்கிறார்கள்: திரிபுரா முதல்வர்

வங்கதேசம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மௌனம் காத்து வருவதாக திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அகர்தலாவில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வங்கதேச விவகாரம் சர... மேலும் பார்க்க