திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வேலூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் செயல் அலுவலா் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வரும் மாா்ச் 25-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆறு உள்பட நீா்நிலைகளில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக குடிநீா் விநியோகம் 40 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.
எனவே, வேலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.