தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
குடிநீா் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரம் ஊராட்சி கட்டனேரி கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீா் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்த கிராமத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இக்கிராமத்தில் குடிநீா் வழங்கவில்லையாம்.
இது தொடா்பாக இக்கிராம மக்கள் பல்வேறு புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திரண்டு வந்து, வள்ளியூா்-திருச்செந்தூா் சாலையில் காலிக்குடங்களுடன் அமா்ந்து மறியிலில் ஈடுபட்டனா். இதனால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சிஅலுவலா் அலெக்ஸ், வள்ளியூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ் மற்றும் போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பேச்சுவாா்த்தையில், உடனடியாக கட்டே னரியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதிஅளித்தனா். இதையடுத்து கிராம மக்கள் போராட் டத்தை கைவிட்டனா்.