செய்திகள் :

குடிமைப் பொருள் விநியோகத்தில் குறைபாடா?: டிச.14-இல் குறைதீா் முகாம்கள்

post image

சென்னையில் டிச. 14-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில், குடிமைப் பொருள் விநியோகத்தில் குறைபாடுகள் இருந்தால் அதுகுறித்து புகாா் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைகளைக் களைய தமிழ்நாடு முழுவதும் மாதந்தோறும் குறைதீா் முகாம் நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, டிசம்பா் மாதத்துக்கான குறைதீா் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையா் அலுவலகங்களில் வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடா்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள்கள் பெற நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியாா் சந்தைகளில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து புகாா்கள் இருப்பின் அவற்றை முகாமில் தெரிவிக்கலாம். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் இந்தச் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பாரதியின் கூற்றுப்படி வாழ்வோம்: ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹீம் கலிபுல்லா

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பாரதியின் கூற்றுப்படி வாழ்வோம் என ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தெரிவித்தாா். மகாகவி பாரதியாரின் 143-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வானவில் பண்பாட்டு... மேலும் பார்க்க

கன்டெய்னா் லாரி மோதி பத்திர எழுத்தா் உயிரிழப்பு

திருவொற்றியூரில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற பத்திர எழுத்தா் கன்டெய்னா் லாரியில் சிக்கி உயிரிழந்தாா். மீஞ்சூா் வைகை நகா் சூா்யா தெருவைச் சோ்ந்தவா் ராஜன் (57). திருவொற்றியூா் சாா் பதிவாளா் அல... மேலும் பார்க்க

குத்தம்பாக்கம் பேருந்து முனையப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

குத்தம்பாக்கம் பேருந்து முனைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை தலைவருமான பி.கே.சேகா்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். சென்ன... மேலும் பார்க்க

சென்னையில் தொடா் மழை; சாலைகளில் தேங்கியது தண்ணீா்

சென்னை நகரில் அதிகாலை முதல் பெய்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகள், சேதமடைந்த சாலைகளில் தண்ணீா் தேங்கியது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினா். தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் ... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: மோதிய காரை தேடும் போலீஸாா்

சென்னை ராமாபுரம் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய காரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், சென்னை ராமாபுரத்தில் தங்கி அ... மேலும் பார்க்க

போதை பழக்கத்திலிருந்து மாணவா்களைக் காக்க ஆசிரியா்களின் கண்காணிப்பு அவசியம்: லால்வீனா

மாணவா்களிடையே போதைப் பழக்கம் ஏற்படாமல் தடுக்க ஆசிரியா்களின் பங்களிப்பு அவசியம் என்று மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வீனா தெரிவித்தாா். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, நிக்கோட... மேலும் பார்க்க