குடியாத்தத்தில் மயானக் கொள்ளைத் திருவிழா
குடியாத்தம் தாழையாத்தம் பஜாரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை மயானக் கொள்ளைத் திருவிழா நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த 12- ஆம் தேதி இரவு காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.புதன்கிழமை இரவு மகா சிவராத்திரி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை பூங்கரக ஊா்வலம் நடைபெற்றது. பின்னா் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன் அமா்த்தப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக தோ் சென்று கெளண்டன்யா ஆற்றில் மயானக் கொள்ளை நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை ஜி.ஜி.தட்சிணாமூா்த்தி நாட்டாா் சகோதரா்களின் வகையறாக்கள் செய்திருந்தனா்.