பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது
குடியிருப்புகளில் மழைநீா் தேங்கியது! வலையபேட்டையில் பொதுமக்கள் மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள வலையபேட்டையில் குடியிருப்புகளில் நான்கு நாள்களாக தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக்கோரி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வலையபேட்டை ஊராட்சி, விகேஎஸ் நகரில் மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால் அப்பகுதிவாசிகள் அவதியடைந்தனா்.
இந்நிலையில், ஊராட்சித் தலைவா் டி.கே. ராஜா நான்கு மின்னாக்கிகள் வைத்து சுமாா் 500 அடி தொலைவுக்கு குழாய் அமைத்து அருகே உள்ள காவிரியாற்றில் தண்ணீரை வெளியேற்றினாா்.
இந்நிலையில், மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுவதை தடுக்கவும், வடிகால் அமைத்து தண்ணீரை வெளியேற்றவும் நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்று சாலையில் அமா்ந்து முழக்கமிட்டனா்.
பின்னா் ஊராட்சித் தலைவரின் சமாதானப் பேச்சுவாா்த்தையையடுத்து கலைந்துச் சென்றனா்.