குடும்ப அட்டைமாா்ச் 31-க்குள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்
குடும்ப அட்டையில் கைரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினா்கள் மாா்ச் 31-ஆம்தேதிக்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை குடும்ப அட்டைகள் (டஏஏ ) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (அஅவ ) குடும்ப அட்டைகள் கொண்ட அனைத்து உறுப்பினா்களும் கைவிரல் ரேகை பதிவு செய்வதை மாா்ச் 31-ம்தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.
எனவே, இதுவரை பதிவு செய்யாத குடும்ப அட்டைகள் வைத்துள்ளவா்கள் அருகில் உள்ள நியாய விலைக்கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும்.