செய்திகள் :

குன்னூரில் கனமழை: மண்சரிவு, மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

post image

நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலை உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதோடு, மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கனமழை பெய்தது. இதனால் குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி உள்ளிட்ட சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூா் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆற்றை ஒட்டிய சாலைத் தடுப்புப் பகுதியில் விரிசல் ஏற்பட்டு ஒரு பகுதி சரிந்து விழுந்தது. குன்னூா் ஐயப்பன் கோயில் சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேல் பாரத் நகா் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில் ஜெபமாலை (58) என்ற மூதாட்டி காயமடைந்தாா். அவரை மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதே பகுதியில் மண் சரிவில் ஒரு காரும் சிக்கியது.

கிருஷ்ணாபுரம் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் துண்டிக்கப்பட்ட சாலை.

குன்னூா்-கோத்தகிரி சாலையிலும் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பா்லியாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழை நீா் புகுந்தது. மேலும் கழிவுநீா் செல்லும் கால்வாயில் பாறைகள் விழுந்ததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்.

குன்னூா் அருகே உள்ள ஆனைபள்ளம், சடையன்கொம்பை, சின்னாளக் கொம்பை போன்ற பழங்குடியின கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அவ்வழியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் சந்தைக்கு வந்து உணவுப் பொருள்கள் வாங்க முடியாமல் தவித்தனா்.

குடியரசுத் தலைவா் உதகை வருகை: ராணுவம், காவல் துறை பாதுகாப்பு ஆலோசனை

நீலகிரி மாவட்டம், குன்னூா் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வரும் 28-ஆம் தேதி வருகிறாா். இதை முன்னிட்டு ராணுவ அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பங்கே... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலத் துறையோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில... மேலும் பார்க்க

வரத்து அதிகரிப்பு: நீலகிரி பூண்டு விலை குறைந்தது

ஹிமாசல பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால் நீலகிரி மலைப் பூண்டின் விலை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. மத்திய பிரதேசம், குஜராத், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்... மேலும் பார்க்க

அருவங்காடு வெடிமருந்து தொழிலக பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்க வலியுறுத்தல்

குன்னூா் அருகே மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில... மேலும் பார்க்க

முதுமலை பழங்குடி மக்களுக்கு சூரிய ஒளி மின் விளக்குகள்

முதுமலை வனப் பகுதியில் வாசிக்கும் பழங்குடி மக்களுக்கு சூரிய ஒளி மின் விளக்குகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முதுகுளி பழங்குடி கிராமத்துக்கு இதுவரை மின... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழுத் தலைவா், உறுப்பினா்கள் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நீலகிரி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க