மிஸ்பண்ணிடாதீங்க... பெல் நிறுவனத்தில் பொறியாளர், மேற்பார்வையாளர் வேலை
குபேரா வெளியீட்டுத் தேதி!
நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.
நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
பான் இந்தியப் படமாக உருவாகும் இப்படத்திற்குக் குபேரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தன.
இதையும் படிக்க: பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி!
இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் உருவாகும் குபேரா திரைப்படம் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
